[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 23 Dec, 2018 10:13 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். சாலையைக் கடக்கும் போது கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்: தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

துலாம்: தந்தைவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்துமோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். 

தனுசு: வாகனப் பழுதை நீக்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அவர்களால் சில உதவிகள் கிட்டும். தெய்வீகச் சிந்தனைகள் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். எதிர்காலத்தைப் பற்றிய உங்களின் கணிப்பு ஓரளவு சரியாகவே இருக்கும். மகிழ்ச்சியான செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close