[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 22 Dec, 2018 09:24 am
  • அ+ அ-

மேஷம்: பொதுக் காரியங்களை முன்னின்று வெற்றிகரமாக நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

ரிஷபம்: அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வும் உண்டாகும். உங்களின் முன்கோபத்தில் நண்பர்கள் சிலரைப் பகைத்துக் கொள்வீர்கள். திடீர் பயணம் உண்டு.. 

மிதுனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். சகோதரர்களாலும் டென்ஷன், ஏமாற்றம் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் திகழ்வீர்கள். இழுபறியாக இருந்த சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.

சிம்மம்: சோம்பல், களைப்பில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்படைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பழைய வாகனத்தை மாற்றி  புது வாகனம்  வாங்குவீர்கள்.

கன்னி: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவும் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பும் உயரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: பிள்ளைகளுக்கு அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் வந்து போகும். திடீர் பயணம், செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: நினைத்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வெள்ளி ஆபரணம் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும்.

கும்பம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 

மீனம்: நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பண வரவு உண்டு.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close