[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Dec, 2018 08:56 am
  • அ+ அ-

மேஷம்: தோற்றப் பொலிவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். 

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பிரபலமானவர்களால் ஆதாயம் கிடைக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். 

கன்னி: குடும்பத்தினரிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். 

துலாம்: யாரையும் நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்திப் பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். தடைபட்ட திருமண முயற்சி கூடிவரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். 

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். உங்களின் ஆலோசனைகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். 

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: திட்டமிட்டக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close