[X] Close

இந்த வாரம் இப்படித்தான்; (மேஷம் முதல் கன்னி வரை) 20-12-2018 முதல் 26-12-2018வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 09:52 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிவிடுவார்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சினைகள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கிச் செயல்கள் வேகமெடுக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்பச் செலவுகள் குறையும். விருந்துகள், சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு, புத்திசாதுரியம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, கோபப்படும் சூழ்நிலை உருவாகலாம். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி l திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 3, 9 l பரிகாரம்: மகா கணபதியைப் பூஜித்து வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதன் ராசியைப் பார்க்கிறார். பணவரவு கூடும். செயல்திறமை அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவைப் பணம் கிடைக்கும். குடும்பத்தினருக்குத் தேவையானவற்றைச் செய்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, இழுபறியாக இருந்த காரியம் முடியும். அரசியல்வாதிகளுக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு, தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க வேண்டும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி l திசைகள்: மேற்கு, வடமேற்கு l நிறங்கள்: வெள்ளை, பச்சை l எண்கள்: 2, 6 l பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்க வேண்டும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதன் கவலையைப் போக்கி நிம்மதி தருவார். அரசுக் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். உங்கள் ராசியைச் சூரியன் பார்ப்பதால் வெளியூர் பயணமும் அலைச்சலும் உண்டாகலாம். தேவையான பண உதவி சற்றுத் தாமதமாகக் கிடைக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு, எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத் துறையினருக்கு, வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: வடமேற்கு, வடக்கு l நிறங்கள்: நீலம், பச்சை l எண்கள்: 3, 5 l பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாத்தி வணங்க மனத்தில் தைரியம் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் காரியத்தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். பக்தி உண்டாகும். சகோதரர்கள், உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு, எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு, துணிச்சல் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, இடமாற்றம், பதவி ஏற்றம் இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 2, 3 l பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாக் காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். பெண்களுக்கு, நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. கலைத் துறையினருக்கு, காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, வீண் வழக்கு, விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு, பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாகப் படிப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 1, 3 பரிகாரம்: ருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் தைரிய ஸ்தானத்தில் தனது சுய சாரத்தில் பயணம் செய்வதால் புத்தி சாதுரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவதென்ற தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். திடீர் சோர்வு உண்டாகும். பேச்சாற்றலால் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து எதையும் செய்யவும். காரியங்களில் சுணக்க நிலை அடியோடு மாறும். உறவினர்களுக்குள் பழைய பகை மாறும். பெண்கள், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடம் உங்கள் சொல்லைக் கேட்டு நடக்கவில்லையென்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு, எதிர்காலக் கல்வி பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: பச்சை, நீலம் l எண்கள்: 5, 6 l பரிகாரம்: துர்க்கை அம்மனைச் செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close