[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 19 Dec, 2018 09:02 am
  • அ+ அ-

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடவோ உத்தரவாதமோ தரவேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உயர் பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளைக் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மகரம்: அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராத மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கும்பம்: திட்டவட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close