[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 08:56 am
  • அ+ அ-

மேஷம்: கைமாற்றாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம்.

ரிஷபம்:  சகோதரர் வகையில் எதிர்பாராத பிரச்சினைகள் வந்து நீங்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். மனைவியுடன் கருத்துமோதல்கள் ஏற்படலாம். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். பண வரவு உண்டு.

கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 

துலாம்: மனப்போராட்டம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: முன்கோபம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் முடியும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம்: எடுத்த காரியம் வெற்றியாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

 

 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close