[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 08:49 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேசவேண்டாம். பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.
**
ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எல்லோரும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
**
மிதுனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தடைப்பட்ட வீடு கட்டுமானப் பணி விரைவாக நடக்கும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.
**
கடகம்: வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன், கவுரவமும் ஒருபடி உயரும். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.
**
சிம்மம்: குடும்பத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள், எதிலும் பிடிப்பற்ற போக்கு, தர்மசங்கடமான சூழல்கள், செலவுகள் வந்துசெல்லும். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
கன்னி: மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
**
துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். உடல்நலம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். திடீர் பயணத்தால் அலைச்சல், அசதியோடு ஆதாயமும் உண்டு.
**
விருச்சிகம்: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது நல்லபடியாக முடியும். புது வாகனம் வாங்குவீர்கள்.
**
தனுசு: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
**
மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள்.
**
கும்பம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நெருக்கமாகப் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள்.
**
மீனம்: எதையோ இழந்ததுபோன்ற கவலைகள், ஒருவித படபடப்பு, அச்சம் வந்து நீங்கும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close