[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 16 Dec, 2018 08:51 am
  • அ+ அ-

மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் மகிழ்ச்சி உண்டு. பேச்சில் நிதானம் தேவை. கேட்ட இடத்தில் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும்.

ரிஷபம்: வங்கிக் கடனுக்கு ஒப்புதல் கிடைக்கும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். 

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மகனுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்.

சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். கொஞ்சம் நிதானித்துச் செயல்படுவது பிரச்சினையைத் தவிர்க்கும்.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். அடகு வைத்திருந்த நகையை மீட்க வழி பிறக்கும்.

துலாம்: பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 

மகரம்: தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். பண வரவு உண்டு.

கும்பம்: புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

மீனம்: யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடவோ, உத்தரவாதமோ தரவேண்டாம்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close