[X] Close

மார்கழி தர்ப்பணம்; மறந்துடாதீங்க!


markazhi-tharppanam

  • kamadenu
  • Posted: 15 Dec, 2018 18:33 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நாளை 16.12.18 மார்கழி மாதம் தொடங்குகிறது. முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக, நாளைய நாளில் தர்ப்பணம் செய்ய மறக்கவேண்டாம்.

தர்ப்பணம் செய்து, இறந்த முன்னோர்களை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். அப்படி முன்னோர்களை வணங்குவதால், அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறலாம்  என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என விவரிக்கின்றன ஞானநூல்கள். மாதந்தோறும் வருகிற அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம் முதலான தருணங்களில் முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக  தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து, நம்மால் முடிந்த வரை நான்கு பேருக்கேனும் உணவு தானம் வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, மார்கழி மாதம் மகத்துவம் மிக்க மாதம். தனுர் மாதத்தில் செய்யும் நற்காரியங்கள் யாவும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் இரட்டிப்புப் பலன்களைத் தந்து, நம்மை இனிதே வாழச் செய்யும் என்பது ஐதீகம்.

எனவே நாளைய தினமான மார்கழி மாதத் தொடக்கம்… அற்புதமான மாதத்தின் பிறப்பில், நம் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்களின்  ஆசியைப் பெற்று, ஆனந்தமாய் நம் சந்ததி சிறக்க வாழ்வோம்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close