[X] Close

விரதம்னா ஏகாதசிதான்!


egadasi

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Dec, 2018 12:21 pm
  • அ+ அ-

கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.  ஸ்ரீமகாவிஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை. தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை. ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை என்பார்கள். வைகுண்ட ஏகாதசி 18.12.18 கொண்டாடப்படுகிறது. 

 ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வரும். இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது ‘மோட்ச ஏகாதசி’. இதையே வைகுண்ட ஏகாதசியாக விரதமிருந்து திருமாலைத் தரிசிக்கிறோம்.

   புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டம் நிச்சயம். அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close