[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 15 Dec, 2018 08:39 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். திட்டமிட்டக் காரியங்கள் கைகூடும்.

கடகம்: சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசியச் செலவு தொடர்ந்தபடி இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்:  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமையை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்தவரின் மனம் மாறும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: கம்பீரமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நவீன கலைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும்.

கும்பம்: மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்திகள் வந்தபடி இருக்கும்.

மீனம்: முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் காட்டாதீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அடுத்தடுத்த ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close