[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 14 Dec, 2018 09:23 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பரால் சில காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: சிறுசிறு அவமானங்கள், வீண் விரயம் ஏற்படக் கூடும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுவது நல்லது.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: எதிர்பார்ப்புகள் தடை, தாமதமின்றி பூர்த்தியாகும். சமூக சேவைக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளிடம் நிலவும் தேவையற்றக் குழப்பத்தைப் போக்குவீர்கள்.

தனுசு: வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாகனம் செலவு வைக்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close