[X] Close

இந்த வாரம் இப்படித்தான் ; மேஷம் முதல் கன்னி வரை (13.12.18 முதல் 19.12.18 வரை)


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 13 Dec, 2018 13:16 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியும். உங்கள் மீது மற்றவர்களுக்கிருந்த கோபம் குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாகப் பணிகளைக் கவனிக்க வேண்டும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பது பலம் என்பதால் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் அகலும். பெண்களுக்கு, கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, இடைத்தரகர்களை எதிர்பாராமல் நீங்களே நேரடியாக முயற்சி செய்யுங்கள். அரசியல்வாதிகளுக்கு, உங்களுக்குச் சில சோதனைகள் நேரும். திடமனத்துடன் இருந்தால் மேலிடத்திடம் நன்மதிப்பையும் கனிவையும் பெறுவீர்கள்.  மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய கவனத்துடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

 பரிகாரம்: குன்றின் மேல் இருக்கும் குமரனைக் கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க வேண்டும். எண்கள்: 5, 7, 8  நிறங்கள்: ஆரஞ்சு, நீலம் திசைகள்: கிழக்கு, தெற்கு  அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் 

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் சூரியன், குருவால் பலவித நன்மைகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனாலும், அஷ்டமத்துச் சனி நடப்பதால் அவசரம் காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். திட்டமிட்டு காரியங்களைச் செய்தால் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு நிதானம் தேவை. கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு,  உங்கள் மன உறுதியும் விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளைப் பெற்றுத்தரும். மாணவர்களுக்கு, திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

 பரிகாரம்:  மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும். எண்கள்: 2, 6  நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்  திசைகள்: மேற்கு, தென்மேற்கு  அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை அகலும். பணவரவு திருப்தி தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். எதிர்மறையான எண்ணங்கள் மறையும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு உயரும். கணவன், மனைவிக்குள் சகஜநிலை நீடிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு, வீண் மனக்கவலை உண்டாகும். கலைத் துறையினருக்கு முயற்சிகளைத் தொடர்வது அவசியம். அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும்.  மாணவர்களுக்கு, உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும்.

 திசைகள்: மேற்கு, வடகிz அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் z பரிகாரம்: பெருமாளைச் சேவித்து வர மனக்குழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும். எண்கள்: 3, 5  நிறங்கள்: பச்சை, மஞ்சள் 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் ராகுவாலும் ராசியைப் பார்க்கும் குருவாலும் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, எந்த வேலையையும் எளிதாகச் செய்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு, சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமாகப் பழகி வருவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். 

 பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள்  விலகும். தைரியம் அதிகரிக்கும்.z எண்கள்: 2, 5  நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை  திசைகள்: வடக்கு, வடமேற்கு அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை, தாமதம் ஆகாமல் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில்  வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படலாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்தினருக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு, மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, பல முன்னனி நிறுவனங்கள் உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாராட்டுகள் குவியும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயத்தை விலக்கி ஆர்வமாகப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

 பரிகாரம்: முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எண்கள்: 1, 3, 6  நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்  திசைகள்: கிழக்கு, தெற்கு அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்துக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளுக்கு, வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே தரக்குறைவாகப் பேசலாம். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். 

 பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும்.z எண்கள்: 2, 3, 5  நிறங்கள்: பச்சை, மஞ்சள்  திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு,  அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close