[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 13 Dec, 2018 08:57 am
  • அ+ அ-

மேஷம்: தொட்ட காரியம் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சி பலிதமாகும்.  குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அரசுப் பதவி கிடைக்கும். இழந்த செல்வாக்கைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும்.

கடகம்: ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடமிருக்கும் அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது. 

சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

துலாம்: தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

தனுசு: இளைய சகோதரர்களால் ஆதாயம் பெறுவீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். எப்பொழுதோ வரவேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். பழைய கடனைத் தீர்க்கும் வழி பிறக்கும்.

கும்பம்: உடல்நலக்குறை, மனச்சோர்வு, பதட்டம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே எதிர்பாராத வகையில் மனக்கசப்பு வந்து நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close