[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 09:09 am
  • அ+ அ-

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

மிதுனம்: அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: எதிலும் தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சாமர்த்தியாகச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் உதவியால் சில வேலைகள் முடிவடையும்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பு நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும்.

தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த பணமும் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை வந்து போகும். உறவினர்கள், நண்பர்களில் யாரை நம்புவது என்பதில் குழப்பம் வரும். காசோலைகளைக் கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.

கும்பம்: வேலைச்சுமை இருக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடங்கலாகி முடியும். சோர்வு, களைப்பு வரும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.

மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close