[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 11 Dec, 2018 08:42 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். 
**
ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
**
மிதுனம்: நீங்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு.
**
கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.
**
சிம்மம் சகோதரரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள்.
**
கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
**
துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். அரசு, வங்கி காரியங்களில் வெற்றி உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
**
விருச்சிகம்: வெகு நாட்களாக மனதை சஞ்சலப்படுத்திய பிரச்சினைகள் தீரும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
**
தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு.
**
மகரம்: பல வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். படபடப்புடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகன வகையில் செலவு ஏற்படும்.
**
கும்பம்: ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
***
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close