[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Dec, 2018 08:51 am
  • அ+ அ-

மேஷம்: உங்கள் நிர்வாகத் திறமை மேம்படும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு, பொருள் வரவு உண்டாகும்.
**
ரிஷபம்: எக்காரியத்திலும் கவனமுடன் செயல்படுங்கள். படபடப்பு, மன உளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் மாலை முதல் கலகலப்பான சூழல் உருவாகும். 
**
மிதுனம்: மனைவி வழியில் நல்ல சேதி உண்டு. புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பெற்றோர் ஆதரிப்பர். மாலை முதல் நிதானம் தேவை.
**
கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.
**
சிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.
**
கன்னி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.
**
துலாம்: அதிகம் உழைக்கவேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.
**
விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரிசெய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
**
தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். கணவன் - மனைவிக்குள் மனப்போர் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
மகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.
**
கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.
**
மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்துகொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close