[X] Close

'மூக்குப்பொடிச் சித்தர்’ காலமானார்!


mookkupodi-samiyar

மூக்குப்பொடிச் சித்தர்

  • kamadenu
  • Posted: 09 Dec, 2018 11:47 am
  • அ+ அ-

டிடிவி தினகரன் அடிக்கடி சென்று தரிசித்து வந்த திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் இன்று 9.12.18 அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது ராஜபாளையம் எனும் கிராமம். இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர் மொட்டையக் கவுண்டர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு துறவறம் போல் வாழ்ந்து வந்த இவர்,  ‘மூக்குப்பொடி’யை விரும்பிப் பயன்படுத்தி வந்தததால், ‘மூக்குப்பொடி’ சித்தர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தார்.

திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார் மூக்குப்பொடி சாமியார். ஒரு இடத்தில் 3 அல்லது நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கமாட்டார் என்கிறார்கள். பல நாட்கள் சாப்பிடாமலும் பேசாமலும் கூட இருப்பாராம்.

ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் தனிமனிதப் பிரச்சினைகளை ‘மறைபொருள்’ மூலமாக சுட்டிக்காட்டுவார். ‘தானே’ புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலூருக்குச் சென்று, கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு, சத்தம் போடாதே’ என்று பேசினார் எனச் சொல்லுவார்கள். மறுநாள், தானே புயல் தாக்கியது. பணமதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்துப் போட்டாராம்.

இதேபோல் கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார்.

'மூக்குப்பொடி' சித்தரின் அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது. ‘மூக்குப்பொடி’ சித்தரை டிடிவி தினகரன் பலமுறை சந்தித்துள்ளார். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் மூக்குப்பொடி சித்தரின் பக்தர் என்பார்கள்.

திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஆசிரமத்தில்  தங்கியிருந்த நிலையில் 'மூக்குப்பொடி' சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அவரை தரிசித்து ஆசி பெற்று வந்த ஏராளமான பக்தர்கள், திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close