[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 09 Dec, 2018 09:08 am
  • அ+ அ-

மேஷம்: பணவரவு உயரும். காரியத் தடைகள், எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபட விடாது முயற்சிப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். 

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: மன இறுக்கம் குறையும். தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்துகளை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்துவந்த மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

துலாம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். 

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆரோக்கியத்தில் கூடுதலாக அக்கறைக் காட்டுவது மிகவும் நல்லது. வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள், கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொதுவிழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம் மற்றும் மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் நீங்கி அமைதி நிலவும். சமயோசிதமாகப் பேசி தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close