[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 09:20 am
  • அ+ அ-

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்பச் செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் துணிவுடன் மேற்கொள்வீர்கள். அடுக்கடுக்காகச் செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படும்.

கடகம்: செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடி வரும்.

கன்னி: கவுரவப் பதவி தேடி வரும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் பேசக் கூட நேரம் இருக்காது. தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

மகரம்:  சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகை அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் வெளிப்படும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close