[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 07 Dec, 2018 08:53 am
  • அ+ அ-

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி மீண்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழி, அவப்பெயர் ஏற்படக் கூடும். 

ரிஷபம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவுகள் எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகள் திடீரென முடியும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள்.

கன்னி: குறிக்கோளை எட்டிப் பிடிக்க தளராது முயற்சிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்.

விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிடாதீர்கள்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகள் கோபம், எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.

மகரம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பண வரவு உண்டு

கும்பம்: தைரியமாக முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவான முடிவெடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close