[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 09:10 am
  • அ+ அ-

மேஷம்: பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் வரும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். சிக்கல்களைத் தீர்க்க நல்லுள்ளம் கொண்ட சிலரின் ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும்.

மிதுனம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை உண்டாகும்.

கடகம்: மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: விலை உயர்ந்தப் பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் வலிய வந்து பேசுவார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்.

கன்னி: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை குடும்பத்துடன் முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: பேச்சில் கடுமை வேண்டாம். சொல்ல வருவதை நாசூக்காகவும், மென்மையாகவும் எடுத்துச் சொல்லுங்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: எத்தனைத் தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள்.

மகரம்: பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.

கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம், அழகு கூடும். பெற்றோருடன் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மீனம்: அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனம் அவ்வப்போது பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். பால்ய சிநேகிதரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close