[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 08:30 am
  • அ+ அ-

மேஷம்: தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
**
ரிஷபம்: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி வழியில் ஆதாயம், லாபம் அதிகரிக்கும்.
**
மிதுனம்: முடியாமல் இழுத்தடித்த காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் நீண்டநாள் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
**
கடகம்: மன உளைச்சல் நீங்கி கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன் -மனைவிக்குள் பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும்.
**
சிம்மம்: வீண் செலவுகளை குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிடைக்கும்.
**
கன்னி: அலைச்சல், அசதி, சோர்வு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
**
துலாம்: எந்த காரியத்தை எடுத்தாலும் பலமுறை முயன்ற பிறகே முடியும். சிலரது தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவில் சிக்குவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். உறவினர், நண்பரிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. 
**
தனுசு: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
**
மகரம்: மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நிலை சீராகும்.
**
கும்பம்: புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
**
மீனம்: ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். நம்பிக்கையோடு செயல்படுங்கள். உதவி கேட்டு உறவினர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close