[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 08:46 am
  • அ+ அ-

மேஷம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்களது உயர்கல்வி விஷயத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
**
ரிஷபம்: புகழ், கவுரவம் ஒருபடி உயரும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவை. 
**
மிதுனம்: நல்ல காற்றோட்டத்துடன் கூடிய புது வீட்டுக்கு குடிபோவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
**
கடகம்: நம்பிக்கை, தைரியம் பிறக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு, வங்கி காரியங்கள் நல்லபடியாக முடிவடையும்.
**
சிம்மம்: எல்லாம் கைகூடி வந்து, திடீரென நின்றுபோன காரியம் சிறப்பாக நடக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கி, அன்யோன்யம் உண்டாகும்.
**
கன்னி: கோபம் அதிகமாகும். நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமோ என்ற ஆதங்கம் அடிமனதில் இருக்கும். மாலை முதல் நிம்மதி கிடைக்கும்.
**
துலாம்: திடீர் பயணங்கள், செலவு அதிகமாகும். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் குறித்து அறிந்துகொள்வது நல்லது.
**
விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.
**
தனுசு: தந்தைவழியில் வரவேண்டிய தொகை கைக்கு வரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பாகப் பிரிவினை நல்ல விதமாக முடியும். புது வேலை கிடைக்கும். 
**
மகரம்: எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித நம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் ஏற்படும்.
**
கும்பம்: குடும்பத்தினரிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. சந்தேக புத்தியால் நல்லவர் நட்பை இழக்க நேரிடும். மாலை முதல் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. 
**
மீனம்: முயற்சிகள் பலிதமாகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close