[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 09:34 am
  • அ+ அ-

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம் : நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மிதுனம் : புது வாகனம், நவீன ரக செல்போன் மற்றும் தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் உல்லாச சுற்றுலாப் பயணமும் சென்று வருவீர்கள்.

கடகம் : பழைய பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள்.

சிம்மம் : அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வாகன வசதி பெருகும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி : குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ள முயலுங்கள்.

துலாம் : குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளைக் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் : குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பயணம் உண்டு.

தனுசு : உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

மகரம் : எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம் : பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். நிதானத்தை இழக்காதீர்கள்.

மீனம் : உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வாகன வசதி பெருகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு உண்டு.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close