[X] Close

பாலகுமாரன் குடும்பத்தினர் நடத்தும் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு ஜயந்தி விழா


yogi-jayanthi-100

பகவான் யோகி ராம்சுரத்குமார்

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 10:12 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினரும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்தினரும் இணைந்து நடத்தும் பகவான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு ஜெயந்தி விழா இன்று டிசம்பர் 1ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன்னுடைய குருநாதராகக் கொண்டு வாழ்ந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். வருடந்தோறும் யோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தித் திருநாளான பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடி வந்தார் பாலகுமாரன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாலகுமாரன் காலமானார். இந்த வருடம் டிசம்பர் 1ம் தேதியான இன்று, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜயந்தி விழா.

இந்த வைபவத்தை பாலகுமாரன் இருந்தால் எப்படி விமரிசையாகக் கொண்டாடுவாரோ அப்படி விமரிசையாகவும் ஆத்மார்த்தமாகவும் கொண்டாடி வருகின்றனர் பாலகுமாரன் குடும்பத்தினர்.

மேலும் பாலகுமாரன் உருவாக்கி அமைத்துத் தந்திருந்த மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்துடன் இணைந்து சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நூற்றாண்டு ஜயந்தி விழா இன்று நடைபெறுகிறது. இந்த மண்டபம் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீயுடனுடைய மண்டபம். இந்த விழாவுக்காக, மண்டபம் உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கிறார் ஷெல்வீ.

இதையொட்டி, காலையில் இருந்தே சிறப்பு ஹோமங்களும் பகவான் யோகி ராம்சுரத்குமார் நாம சங்கீர்த்தனம் மற்றும் பாடல்களும் பாடப்படுகின்றன.

மாலையில் 5 மணி முதல் 6.30 மணி வரை மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் வழங்கும் நாமசங்கீர்த்தனப் பாடல்கள் மற்றும் பகவான் 100 காணொளி நூற்றாண்டு விழா மலர் வெளியீடு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மாலை 6.30 மணிக்கு கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் அவர்களின் நூற்றாண்டு காணும் நூதன குருதேவர் எனும் தலைப்பில் உபந்யாசம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினர் மற்றும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close