[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 08:52 am
  • அ+ அ-

மேஷம்: நண்பர்களால் ஆதாயம் உண்டு. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராது கருத்துமோதல்கள் வந்து நீங்கும்.

மிதுனம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். உறவினர்கள் பாராட்டுவார்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

சிம்மம்: குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்லுங்கள். சிறுசிறு அவமானங்கள், மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். 

கன்னி: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீனோ, உத்தரவாதமோ தரவேண்டாம்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள்.

மகரம்: தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களில் அதிரடியான முடிவுகள் எடுப்பீர்கள்.

கும்பம்: மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வேற்றுமதத்தவர் உதவுவார். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். காரியங்களில் கவனம் தேவை.

மீனம்: உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close