[X] Close

எதிரிகளை விரட்டுவார்; எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவார்; - அஷ்டமியில் பைரவரை வணங்குங்கள்


bariravar-ashtami

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:19 am
  • அ+ அ-

- இன்று காலபைரவாஷ்டமி

வி.ராம்ஜி

அஷ்டமியில் பைரவரை மறக்காமல் வழிபட்டால், நம்முடைய கஷ்டமெல்லாம் இனி மறந்துவிடலாம். அனைத்தையும் நீக்கி அருள்புரிவார் பைரவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இன்று அஷ்டமி. கால பைரவாஷ்டமி. மகாதேவாஷ்டமி. கார்த்திகயின் அஷ்டமி ரொம்பவே விசேஷம். சக்தி வாய்ந்த நாள் இன்று!

கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு சொல் உண்டு. இந்தக் கலியுகத்தில், காலபைரவர் வழிபாடு செய்யச் செய்ய... எல்லா இடர்பாடுகளும் விலகும் என்பது ஐதீகம். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்று சொல்லிவைத்தார்கள்.

எல்லா சிவன் கோயில்களிலும் காலபைரவருக்கு என சந்நிதி உண்டு. பெரும்பாலும் சந்நிதி, விமானம் என்றில்லாமல், காட்சி தருவார் காலபைரவர். அஷ்டமி திதியில் பைரவரை வணங்குவது சிறப்பு. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம், பயம் அனைத்தையும் போக்கி, எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி, நல்லனவற்றையெல்லாம் தந்தருளும் என்பது ஐதீகம்.

பிராகாரச் சுற்றின் நிறைவில், பொதுவாக காட்சி தருவார் பைரவர். ஆகவே, மாலையில் சிவாலயம் சென்று, பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையைத் தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். மாலையில் சிவாலயம் செல்லுங்கள். காலபைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வதும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும் இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது. முடிந்தால், பைரவருக்கு வடைமாலை சார்த்தலாம்.

அஷ்டமி திதியில், மாலையில் பைரவரைத் தரிசித்து, உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்யுங்கள். எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். இன்னல்கள் யாவும் காணாமல் போகும். கவலைகளையெல்லாம் நீங்கள் மறந்தேபோவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் பைரவரின் பேரருள் வியாபித்திருக்கும்.

ஆகவே பைரவரை மறக்காமல் வழிபடுங்கள். உங்கள் கவலைகளையெல்லாம் மறந்தேவிடுவீர்கள். எதிரிகளை விரட்டுவார். எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close