[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:08 am
  • அ+ அ-

மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம் : எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம் : உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நாடி வந்தவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். வாகனப் பழுதை நீக்குவீர்கள்.

கடகம் : இங்கிதமாகப் பேசி கடினமானக் காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அழகு, இளமை கூடும். திடீர் பயணங்கள் உண்டு.

சிம்மம் : பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

கன்னி : யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

துலாம் : கடன் பிரச்சினை ஓரளவு கட்டுக்குள் வரும். விலகி நின்ற சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். நெருங்கிய நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

விருச்சிகம் : எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

தனுசு : உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம் : உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து செயல்படுவது நல்லது. சில காரியங்களை பலமுறை முயன்று முடிக்க வேண்டியது வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம் : குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் ஏற்படும். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை உண்டு.

மீனம் : உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வழக்கின் முடிவு உங்களுக்குச் சாதகமாகும்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close