[X] Close

வார ராசிபலன் நவம்பர் 29 முதல் டிசம்பர் 05 வரை (துலாம் முதல் மீனம் வரை)


weekly-horoscope-set-2

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 11:38 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். வீண் அலைச்சல் இருப்பினும் பணவரவு நன்றாக இருக்கும். காரிய தாமதம் நீங்கும். மனத்தில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

மேலதிதிகாரிகள் கூறுவதை மறுத்துப் பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். குடும்பத்துக்குத் தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு, எதையும் ஆக்கபூர்வமாகச் செய்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசிப் பொழுதைக் கழிப்பீர்கள். அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தென் கிழக்கு, வடக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

எண்கள்: 4, 5, 9

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.  ராதியாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் ராசிக்கு சுகஸ்தானத்தில் இருப்பது மனோதைரியத்தைத் தரும். எதையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பினால் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். எதிர்பார்த்த பணியிட மாற்றம், பதவி உயர்வு தங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நல்ல தகவல் வந்து சேரும்.

சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு, கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: தென்மேற்கு, மேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 6, 9

பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாகச் செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடிச் செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசியாதிபதி குருவின் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. வர்த்தகத் திறமை அதிகரிக்கும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு, துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென் மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சிவபெருமானை தினமும் 11 முறை வலம் வந்து வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனியின் சஞ்சாரத்தால் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் இடமாற்றமும் அதனால் சாதகமும் உண்டு. வீண் செலவுகள், கவுரவக் குறைச்சல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் பணவரவு இருக்கும். பேச்சைக் குறைத்துச் செயலில் ஈடுபடுவது நன்மையைத் தரும். சக ஊழியர்களின் ஆதரவுடன் காரியங்கள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும்.

பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு தொல்லைகள் குறையும். கலைத் துறையினருக்கு, உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப்போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: கருநீலம், சிவப்பு

எண்கள்: 5, 6

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் திடீர் கோபம் வரும். அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். வேளை தவறாமல் உணவு உண்ணவும். எடுத்துக் கொண்ட பணிகளில் தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பெண்களுக்கு பணவரவு இருக்கும். கலைத் துறையினருக்கு லாபங்கள் பெருகும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை திருத்தமாகச் செய்வீர்கள். மாணவர்களுக்கு, கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: கரும்பச்சை, நீலம்

எண்கள்: 6, 7, 9

பரிகாரம்: ஆஞ்சனேயர் கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் மனம்மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து, கேளிக்கைகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். ராசியாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால் பணவரவு கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமையாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.

சக ஊழியர்கள் உதவியால் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு, முயற்சிகளில் சாதகமான பலன்கள் இருக்கும் . கலைத் துறையினருக்கு செலவுகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, தொல்லைகளும் வேறுபாடு நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். மாணவர்களுக்கு, திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி ஒன்பது ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close