[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 06:52 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்றபடி வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பத்துக்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீகச் சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நவீன ஆடை, ஆபணரங்கள் சேரும்.

கடகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல்நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: வேலைகள் தடைப்பட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.

கன்னி: வீண் அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்: பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுப்பார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின் கைக்கு வரும்.

மகரம்: விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close