[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 09:16 am
  • அ+ அ-

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இனிய அனுபவம் உண்டாகும்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மிதுனம்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: வேலைச்சுமையால் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

சிம்மம்: திட்டமிட்டக் காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு கொடுக்கும்.

கன்னி: காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரம் விரிவடையும்.

துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற வேலை முடியும். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: குடும்பத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். பண வரவு திருப்தி தரும்.

மகரம்: உங்களின் திறமைகள் வெளிப்படும். கடினமானக் காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நவீன கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின், எதிர்காலம், உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close