[X] Close

மோசமான நீர் மேலாண்மையால் வெள்ளக்காடான மதுரை: கண்மாய்களை திறந்துவிட்டதால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்


heavy-rain-at-madurai

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 11:39 am
  • அ+ அ-

 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் தூர்வாரப்படாத கண்மாய்களில் தண்ணீர் தேக்க முடி யாமல் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மதுரை வடக்கு, கிழக்குப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் மதுரையை தவிர பிற மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை மதுரையை ஏமாற்றி வந்தது. நீர் பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாமல் பெரியாறு, வைகை அணைகளுக்குமே கடந்த 3 ஆண்டுகளாக சரியாக நீர்வரத்து இல்லை. இதனால், வைகை ஆறு வறண்டுவிட்டது. மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வற ண்டன.

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக தென்மேற்குப் பருவமழை மதுரையில் ஓரளவு பெய்தது. வடகிழக்குப் பருவ மழை தொடங்காத நிலையில், கடந்த 10 நாட்களாக மதுரையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் முறையாக தூர்வாராத கண்மாய்கள் வேகமாக நிரம்பின. ஒரு கண்மாய் நிரம்பி, அடுத்தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

வண்டியூர், செல்லூர் கண்மாய் கரைகளில் கட்டப்பட்ட தனியார் நிறுவனக் கட்டிடங்கள், வீடுகளை தண்ணீர் மூழ்கடிக்கத் தொடங்கியது.

தொடர்மழையால் மதுரை புறநகர் கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால், ஒட்டுமொத்த மழை நீரும் நேற்றிரவு முதல் மதுரை வண்டியூர், செல்லூர் கண்மாய்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

நேற்று காலை வண்டியூர் கண்மாய் நிரம்பி, நகரின் மையமான கே.கே.நகர் அருகே லேக் ஏரியா சுந்தரம் பூங்கா மூழ்கத் தொடங்கியது. நேற்று காலை நடைப்பயிற்சிக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வண்டியூர் கண்மாய் உடைந்து நகர பகுதியில் தண்ணீர் புகுவதைத் தடுக்க, அனைத்து ஷட்டர்களையும் திறந்து, ஆங்காங்கே உள்ள கிளை கால்வாய்கள் வழியாக வைகை ஆற்றுக்கு தண்ணீரை திருப்பிவிட்டனர்.

அதேபோல, வண்டியூர் ஆற்றுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டனர். வண்டியூர் கண்மாயில் இருந்து ஒட்டுமொத்தமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கால் வாய்கள் உடைந்து அந்த தண்ணீர் குடியிருப்புகளைச் சூழ்ந்தது.

அதனால், மதுரை ஸ்ரீ சிவசக்தி நகர், குழந்தை சாமி நகர், பாண்டியன் நகர், யாகப்பா நகரின் விரிவாக்கப்பகுதிகள், அண்ணா நகர் லேக் வியூ ரோடு பகுதி மற்றும் டிஎம்.நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பகல் நேரத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளில் இருந்து கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறினர். செல்லூர் கண்மாய் திறந்துவிடப்பட்டதால் கூடல்புதூர், ஆனையூர் பகுதியில் இருந்த 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

அதனால், மாவட்ட நிர்வாகம், வண்டியூர், செல்லூர் கண்மாய்களுக்கு வந்த தண்ணீர், தேங்கிய தண்ணீர் அனைத்தையும் வைகை ஆற்றில் வெளியேற்றியது. வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டாவாது கருணை காட்டுமா? அதன் மூலம் மதுரை கண்மாய்களை நிரப்ப முடி யுமா? என்று ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் மோசமான நீர் மேலாண்மை, தூர்வாரப்படாத கண்மாய்கள், ஆக் கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளால் மழை நீரை வண்டியூர், செல்லூர், கொடிக் குளம் உள்ளிட்ட நகரின் பெரிய கண் மாய்களில் சேமிக்க முடியாமல் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட அவலம் அரங் கேறியது. மழை பாதிப்புகளை பார்வையிட்ட ஆட்சியர் ச.நடராஜன் கூறுகையில், ‘‘மதுரை நகர் மற்றும் புறநகரில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. நீர்நிலைகள், கால்வாய்கள் ஆக்கி ரமிப்புகள் வேகமாக அகற்றப்படுகின் றன,’’ என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close