[X] Close

திண்டுக்கல் மாவட்டத்தில்  புறக்கணிக்கப்படும் பெண் சிசுக்கள்: ஒரு வாரத்தில் மூன்று சிசுக்கள் மீட்பு


girl-child-in-dindugal

திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் பிரசவித்த தாய் விட்டுச் சென்ற பெண் குழந்தை.

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 15:27 pm
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தைகளை புதர்களில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பெண் சிசுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் அருகே வீரக்கல்லைச் சேர்ந்த பாண்டி மனைவி ராமக்காள்(30). இவர் பிரசவத்துக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக் கப்பட்டார். இவருக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை இன்கு பேட்டரில் வைத்து பாதுகாத்தனர். நேற்று காலை குழந்தைக்கு பால் புகட்ட தாயாரை தேடியபோது காணவில்லை.

இதையடுத்து அரசு மருத்து வமனை நிர்வாகம் சார்பில் போலீ ஸில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதி கூறியதாவது: ராமக்காளுக்கு இது மூன்றாவது குழந்தை. அவருக்கு ஏற்கெனவே பெண் குழந்தைகள் இருந்திருக்கலாம். அதனால் இக்குழந்தையை விட்டு சென்றிருக்கலாம். அக் குழந்தையை வலுக்கட்டாயமாக பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், குழந்தையை வளர்ப்பதில் சிக்கல் உள்ளது. எனவே இதை தொட்டில் குழந்தையாகக் கருதி சமூகநலத் துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். குழந்தையின் பெற் றோர் மீதும் புகார் தரப்பட்டுள்ளது என்றார்.

புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை

குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சிக்குட்பட்ட சின்னழகு நாயக்கனூர் வறட் டாறு ஓடைப் புதரில் நேற்று யாரோ பெண் சிசுவை வீசிச் சென்றுள்ளனர். அப்பகுதியினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், திண்டுக்கல் அரசு மருத்து வமனையில் குழந்தையை ஒப் படைத்தனர். பிறந்து 5 மணி நேரத்தில் பெண் சிசுவை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அடுத்தடுத்து சம்பவம்

சில தினங்களுக்கு முன் ஒட்டன் சத்திரம் அருகே கேதையுறம்பு கிராமத்தில் பிறந்து சில மணி நேரத்திலேயே பெண் குழந்தை ஒன்று முட்புதரில் வீசப்பட்டது. அப்பகுதியினர் குழந்தையை மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close