[X] Close

தங்களையே கலாய்த்துக் கொண்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ படக்குழு. வைரலாகும் போஸ்டர்


super-deluxe-poster-goes-viral-in-vadivelu-version

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 09:58 am
  • அ+ அ-

தங்களையே கலாய்த்து வடிவேலுவப் பின்னணியாகக் கொண்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ போஸ்டரை வெளியிட்டு பாராட்டுகளை அள்ளி வருகிறது படக்குழு

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட வருடங்கள் கழித்து தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்புக்குரிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று (அக்.8) வெளியிட்டது படக்குழு. இதில் விஜய்சேதுபதியின் லுக்கை பல்வேறு திரையுலகினரும் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்துமே வடிவேலுவாக இருந்தால் எப்படி என்ற ஒரு போஸ்டர் வெளியானது. இதனை படக்குழுவினரே வெளியிட்டது தான் ஆச்சர்யம்.  இந்தப் போஸ்டரையும் பலரும் பகிர்ந்து ‘செம சூப்பர்.. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்து வருகிறார்கள்.



ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு, வடிவேலுவைக் கொண்ட போஸ்டர் என இரண்டுமே இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. வடிவேலுவைக் கொண்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ போஸ்டருக்காக படக்குழுவினர் வெளியிட்ட சில கருத்துகள்:

தியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இப்படத்துக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close