[X] Close

கோவை ரயில் நிலைய நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? - போத்தனூர், வடகோவையையும் ரயில் முனையமாக மாற்ற வலியுறுத்தல்


kovai-railway-station

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 10:44 am
  • அ+ அ-

கோவை ரயில் நிலையத்தின் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், போத்தனூர், வடகோவை ரயில் நிலையங்களை யும் ரயில் முனையமாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

சென்னைக்கு அடுத்த பெரிய தொழில்நகரமான கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் 65-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து, செல்கின்றன. ஏறத்தாழ 30 ஆயிரம் பயணிகள் நாள்தோறும் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பேருந்து உள்ளிட்ட பிற வாகனப் போக்குவரத்துக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், ரயில்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இங்குள்ள 6 பிளாட் பாரங்களில் 4 பிளாட்பாரங்கள் முழு அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இரவு-பகல் என 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்லும் நிலை யில், பார்க்கிங் உட்பட போதுமான வசதிகள் இல்லை எனவும் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்ற னர்.

கோவை ரயில் நிலையம் மூலமாக சேலம் ரயில்வே கோட்டத் துக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும் நிலையில், மல்டி லெவல் பார்க்கிங் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டு மெனவும் வலியுறுத்தப்படுகிறது. அதேசமயம், வடகோவை, போத் தனூர் ரயில் நிலையங்களையும் ரயில் முனையமாக மாற்ற வேண்டு மென்றும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

ரயில் முனையங்கள்

இது தொடர்பாக கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்புத் தலைவர் சி.எம்.ஜெயராமன் ‘இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் கூறியதாவது: சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கோவையிலிருந்து நேரடியாக ரயில்கள் இயக்கப்படு கின்றன. மேலும், நாட்டில் உள்ள பல நகரங்களுக்கு இந்த ரயில் நிலை யம் வழியாக ரயில்கள் செல்கின்றன. பல்லாயிரக்கணக்கான பயணிகள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த அளவுக்கு பயணிகளைத் தாங்கும் அளவுக்கு கோவை ரயில் நிலையம் இல்லை. அருகிலேயே மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவல கங்கள், தீயணைப்பு அலுவலகம், மசூதி, அஞ்சல் அலுவலகம் உள் ளிட்டவை இருப்பதாலும், சுற்றிலும் கட்டிடங்கள் இருப்பதாலும் இந்த ரயில் நிலையத்தை விரிவுபடுத்த முடியாது.

எனவே, சென்னை, பெங்களூரு, டெல்லியில் இருப்பது போல, கூடுதல் ரயில் முனையங் களை உருவாக்க வேண்டும்.

போத்தனூர், வடகோவையில் உள்ள ரயில் நிலையங்களில் தேவை யான அளவுக்கு இடமிருப்பதால், அவற்றை மாற்று ரயில் முனையங் களாக மாற்றலாம். கோவையி லிருந்து மதுரை மற்றும் கேரளா செல்லும் ரயில்களை வடகோவை ரயில் நிலையத்திலிருந்தும், பெங் களூரு, டெல்லி, சென்னை, மும்பை செல்லும் ரயில்களை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்தும் இயக்கலாம். அந்த ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்கும் வந்து, சென்றால் பயணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது. இதனால், கோவை ரயில் நிலை யத்தில் நெருக்கடி குறைவதுடன், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.

இந்தக் கோரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். கோவை வந்த ரயில்வே இணை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்களிடமும் வலியுறுத்தினோம்.

நீலகிரி எக்ஸ்பிரஸ்

முன்பு, மதுரைக்கு பொள்ளாச்சி வழியாக 6 ரயில்கள் இயங்கிய நிலையில், தற்போது ஒரு ரயில் மட்டுமே செல்கிறது. சென்னையில் இரவு 9 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு அதிகாலை 5 மணிக்கு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ், மீண்டும் இரவு 9 மணியளவில் கோவையி லிருந்து புறப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்த ரயிலை மதுரை, நெல்லைக்கு இயக்கினால், பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருப்பதுடன், ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும்.

கோவை ரயில் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள டிக்கெட் கவுன்ட் டர்களுடன், தனியார் ஏஜென்சி மூலம் இரு கவுன்ட்டர்கள் அமைத்து, முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த கவுன்ட்டர்களில், நிர்ணயிக்கப் பட்ட டிக்கெட் விலையைக் காட்டி லும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டிக்கெட்டுக்கு ரூ.3-க்கு மேல் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்படுவ தால், பயணிகள் பாதிக்கப்படுகின் றனர்.

ஏற்கெனவே இது தொடர்பாக சேலம் கோட்ட மேலாளரிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் கட்டணத்தை தனியார் ஏஜென்சிகள் வசூலிக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ரயில்வே உயரதி காரிகள் கூறும்போது, ‘கோவை ரயில் நிலையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்யப்படும். வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களை ரயில் முனையமாக மாற்றுவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவெடுக்கும்` என்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close