[X] Close

மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி? - சுகாதார பணிகள் துணை இயக்குநர் விளக்கம் 


how-to-cure-rain-disease

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 15:14 pm
  • அ+ அ-

மழைக்காலத்தில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம்.கீதாராணி விளக்கியுள்ளார்.

அவரது அறிக்கை:

தண்ணீர் மற்றும் பூச்சிகளால் பரவும் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை அருந்த வேண்டும். கைகளை அடிக்கடி நீரினால் கழுவ வேண்டும். நீரில் நனைந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது.

யாருக்கேனும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் அதிகமானோருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, நடமாடும் மருத்துவக்குழு மற்றும் பொது சுகாதார கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனே தகவல் தர வேண்டும்.

குளங்கள் மற்றும் திறந்த வெளி கிணறுகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதை பொதுமக்கள் பார்க்க நேர்ந்தால், உடனடியாக பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

இறந்துபோன விலங்குகள் மற்றும் பறவைகளை காண நேர்ந்தால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவற்றை ஆழப்பள்ளம் தோண்டி புதைத்து, அந்த இடத்தில் பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close