[X] Close

நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் துர்நாற்றம் வீசாமல் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கலாம்: மாநகராட்சி விழிப்புணர்வு கண்காட்சியில் தகவல்


new-technology-introduced-to-produce-fertilizer

வீட்டிலேயே குப்பையை உரமாக்குவது தொடர்பாக திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள உபகரணங்களை ஆர்வமுடன் பார்க்கும் மாணவிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 14:49 pm
  • அ+ அ-

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகளைக் கொண்டு குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசாத வகையில் உரம் தயாரிக்க முடியும் என மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கண் காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை முறையில் உரம் மற்றும் பயோ- காஸ் உற்பத்தி செய்வது குறித்த குறித்த இரு நாள் விழிப்புணர்வு கண்காட்சி, கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நகராட்சி நிர்வாக செங்கல்பட்டு மண்டலப் பொறியா ளர் முருகேசன் பேசியது:

மக்கும் குப்பையை எளிதாக கையாண்டு, அதிலிருந்து இயற் கை முறையில் உரம் மற்றும் பயோ- காஸ் தயாரிக்க முடியும். இதை மக்களுக்கு விளக்கும் வகையில்தான் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும், பயோ-காஸ் தயாரிக்கவும் உதவும் எளிய கருவிகள் முதல் பெரிய கருவிகள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசாத வகையில் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி இந்தக் கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, வீடுகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், அடுக்குமாடி குடியிருப் புகள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் ஆகியற்றில் உருவாகும் குப்பைக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டு திருச்சி மாநகராட்சியின் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, குப்பையில்லா நகரமாக மாற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் பேசியது:

திருச்சி மாநகராட்சியில் நாள்தோறும் 450 டன் குப்பை பெறப்படுகிறது. இதில், சுமார் 225 டன் குப்பையில் இருந்து உரம் மற்றும் பயோ- காஸ் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் குப்பை குறைந்து சுற்றுப்புறச் சூழல் மேம்படுவதுடன், வீட்டுச் செலவினமும் குறையும்.

வீட்டிலேயே மக்கும் குப்பையை உரமாக்கும் முறை, மாடித் தோட்டம், மழைநீர் சேகரிப்பு, சோலார் கருவி ஆகியன இருந்தால் அந்த வீட்டை தன்னிறைவு பெற்ற வீடாக கூறலாம்.

வீடுகளில் உரம் உற்பத்தி செய்யும் திட்டம் நிறைவேறும் போது, தூய்மை நகரம், பசுமை நகரம், வாழத்தகுந்த நகரம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக நாட்டிலேயே அனைத்து வீடுக ளிலும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நகரம் என்ற பெருமையும் திருச்சிக்குக் கிடைக்கும்’’ என்றார்.

அஞ்சல் துறை மத்திய மண்டலத் தலைவர் அம்பேஷ் உப்மன்யு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கண் காட்சியைத் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், நகரப் பொறியாளர் அமுதவள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக உதவிப் பேராசி ரியர் நிதி, மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் குமரேசன், உதவி ஆணையர்கள் தயாநிதி, துரைமுருகன், பிரபாகரன், சேக் அயூப் மற்றும் குடியிருப்பு நலச் சங்கத்தினர், கல்லூரி மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close