[X] Close

4 ஆண்டுகளாக பேராசிரியர்கள் இல்லாத அவலம்: கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 


no-teachers-at-school

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 19:14 pm
  • அ+ அ-

நுண்ணறிவியல் துறைக்கு பேராசிரியரை நியமிக்க வலியுறுத்தி, கடலூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் தேவனாம்பட்டி ணத்தில் உள்ள பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை அறிவியல் நுண்ணுயிரியல் ( BSc - Micro Biology) பாடப்பிரிவு 4 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாடப் பிரிவில் ஆண்டுக்கு 58 மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆனாலும் இதுவரை அதற்கான பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பாடத் துறை தலைவராக தாவரவியல் பாடத்துறை தலைவரே கூடுதல் பொறுப்பு வகிப்பதாகவும் கூறப்படுகிறது. துறை பேராசிரியர்கள் இல்லாததால், மற்றத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் தான் பாடம் நடத்துகின்றனராம். இதனால் மாணவர்கள் தேர்வெழுத முடியாமல், பலர் தோல்வியடையும் நிலை ஏற்படுகிறது.

பட்டமளிப்பு விழாவில் நுண்ணுயிரியல் பாடப்பிரிவைச் சேர்ந்த எவரும் இதுவரை பட்டம் பெறவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். நுண்ணுயிரியல் பாடப்பிரிவுக்கு பேராசிரியரை நியமிக்க வலியு றுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுவரையில் 6 முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 7-வது முறையாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கள் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

பேராசிரியர்களை நியமிக்கக் கோரி கல்லூரி முதல்வர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வரை முறையாக மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close