[X] Close

ஜம்முனு மழை பெய்யாம சுள்ளுன்னு வெயில் அடிச்சா அதான் ரெட் அலர்ட்!- நெட்டிசன்கள் கலாய் 


red-alert-and-netizens-reax

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Oct, 2018 12:21 pm
  • அ+ அ-

சர்கார் பட விழாவில் உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும் கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்று விஜய் பேசினாலும் பேசினார் இணையத்தில் எதுக்கெடுத்தாலும் இந்த டயலாக் தான்.

இந்த டயலாக்கில் லேட்டஸ்ட்டா சிக்கியிருப்பது ரெட் அலர்ட். ஜம்முனு மழை பெய்யாம சுள்ளுன்னு வெயில் அடிச்சா அதான் ரெட் அலர்ட் என நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

7-ம் தேதி, ரெட் அலர்ட் இதுதான் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களாக இருக்க வேண்டும். 
காரணம் ஒரே ஒரு அலர்ட் ஏற்படுத்திய அச்ச உணர்வு. 

ஆனால், இன்று காலை 11 மணியிலிருந்தே பலரும் ரெட் அலர்ட்டை கலாய்க்கத் தொடங்கியும் விட்டனர். சுள்ளென்று வெயில் அடித்தால்தான் ரெட் அலர்ட், சூரியன் ரெட் அதுதான் ரெட் அலர்ட் என்றெல்லாம் கிண்டல்கள் ஆரம்பித்துவிட்டன. காரணம் பரவலாக பல இடங்களில் கன மழை என்று உணர்த்தும் ரெட் அலர்ட் போங்கு காட்டி வருவதே.

சரி உண்மையிலேயே ரெட் அலர்ட் என்றால்தான் என்ன?

இது மோசமான வானிலையை உணர்த்தும் அலர்ட். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். சாலைகள் துண்டிக்கப்படலாம், மின்சார தடை ஏற்படலாம். உள்ளூர் நிர்வாகம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது எல்லாம் மக்கள் அச்சப்படுவதற்காக அல்ல அரசாங்கம் மாற்று ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க. ஆனால், நம்ம மக்கள் ரெட் அலர்ட் என்றவுடன் வீட்டை காலி செய்யத் தொடங்கிவிட்டனர்.

சரி ரெட் அலர்ட் போல் இன்னும் சில அலர்ட்களும் இருக்கின்றன. அவை ஆம்பர் அலர்ட், யெல்லோ அலர்ட், க்ரீன் அலர்ட்.

ஆம்பர் அலர்ட் என்றால் இது ரெட் அலர்டுக்கு அடுத்த படிநிலை. இது மோசமான வானிலை வருவதற்கு முன்னதாகவே விடுக்கப்படும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் தாழ்வான பகுதிகளில் வசிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவார்கள்.

மஞ்சள் அலெர்ட். இது, இனி அடுத்து வரும் சில நாட்களில் வானிலை மோசமடையலாம் என்ற முன்னெச்சரிக்கை. மோசமான வானிலை வருவதற்கான அறிகுறி இருப்பதாக வெகு நாட்களுக்கு முன்னரே அலர்ட் செய்துவிடுவதே இது.

க்ரீன் அலர்ட் என்றால் அப்பாடா இனி எந்த ஆபத்தும் இல்லை என்று பெரு மூச்சுவிட்டுக் கொள்வதற்காக விடுக்கப்படும் அறிவிப்பு. க்ரீன் அலர்ட் அறிவிக்கப்பட்டால் நிலைமை சீராக இருக்கிறது என்று அர்த்தம்.

எனவே, இவை எல்லாமே அலர்ட். உங்களை எச்சரிக்கவே தவிர அச்சுறுத்த அல்ல என்பதை புரிந்து பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close