[X] Close

கேரள யானைகளுக்கு வாத்தியாரான மதுரை ‘சுமதி’ யானை: பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ருசிகரம்


sumathi-elephant

சுமதி யானை.

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 17:05 pm
  • அ+ அ-

நடிகர் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான மதுரை சுமதி யானை, தற்போது கேரளா யானைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வாத்தியாராகியுள்ளது.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த மதன்பாபு, சுமதி என்ற பெயரில் யானை வளர்த்து வருகிறார். மதுரையில் இந்த யானையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நடிகர் சூர்யா, விஜய்சேதுபதி, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலெல்லாம் நடித்துள்ளது.

மதுரையில் நடைபெறும் ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்த விழாக்களில் சுமதி யானையின் நடை, சேட்டைகள் பார்வையாளர்களை ஈர்க்கும்.

43 வயதாகும் சுமதி யானையின் மீது அதன் உரிமையாளர் மதன்பாபுவுக்கு கொள்ளைப் பிரியம். இவரது பாட்டனார் துரைச்சாமி, தாத்தா ராதாகிருஷ்ணன், அப்பா விமலன், தற்போது இவர் என நான்காவது தலைமுறையாக யானை வளத்து வருகிறார்.

மைசூர் மகாராஜா அரண் மனையில் யானைகளைப் பராமரிக்கும் பணியில் இவர்களது குடும்பத்தார் ஈடுபட்டிருந்தனர். யானைகள் வளர்ப்பது இவர்க ளுடைய குடும்பப் பாரம்பரியத் தொழிலாக உள்ளது. அந்த மரபின் தொடர்ச்சிதான் இன்று மதன்பாபு வரை யானை வளர்ப்பதற்குக் கார ணம்.

பாகன்கள் சொல்கின்ற கட்டளைகளை உள்வாங்கி அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் கூரிய மதிநுட்பம் கொண்டது இந்த சுமதி யானை. ஊர்ப்புறங்களில், கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு, அவைகளின் இருப்பிடத்திற்கே சென்று இந்த சுமதி யானை பயிற்சி அளிக்கிறது.

கேரளாவில் இதுபோன்ற யானைகளை ‘பணியறிஞ்ச யானனை’ என்பார்கள். தற்போது சுமதி யானை கேரளாவிற்கும் சென்று அங்குள்ள யானைகளு க்குப் பயிற்சி அளித்து வருகிறது.

அண்மையில் மதுரையில் கோயில் யானை ஒன்று முரண்டு பிடித்த வேளையில், சுமதி யானையும், அதன் பாகன்கள் நாகூர்மீரான், ஆறுமுகம் ஆகி யோரும் சென்றுதான் அக் கோயில் யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமதி யானையின் பெருமைக ளையும், அதன் வளர்ப்பையும் பற்றி அதன் சொந்தக்காரர் மதன்பாபு கூறியதாவது:

நானறிந்து இதுவரை 50 யானைகள் வரை எங்களது குடும்ப வம்சாவளியினர் வளர்த்துள்ளனர். சுமதி யானைக்கு 43 வயதானாலும், குட்டி யானைக்கு என்னென்ன குறும்புகள் இருக்குமோ அவ் வளவும் சுமதிக்கு உண்டு. வனத்துறையிடம் முறையான உரிமம் பெற்றே நாங்கள் யானை யை வளர்த்து வருகிறோம்.

மதுரை வனத்துறையினரும், கால்நடைத்துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் சுமதி யானையின் மீது அளவிலாத அன்பு கொண்டவர்களாவர். பெரும் ரசிகர் பட்டாளத்தையே சுமதி யானை வைத்துள்ளது, என்றார்.

யானையைக் கட்டி தீனி போடுற மாதிரின்னு நம் மக்கள் பழமொழி கூறுவார்கள். இந்தக் காலத்திலும் யானையை வளர்த்து அதற்குத் தேவையான உணவைக் கொடுத்து குடும்பத்தில் ஓர் உறுப்பினராக வளர்ப்பது பெரும் சாதனைதான். சுமதி யானைக்கு 43 வயதானாலும், குட்டி யானைக்கு என்னென்ன குறும்புகள் இருக்குமோ அவ் வளவும் சுமதிக்கு உண்டு.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close