[X] Close

அரசு ஆவணங்களில் தமிழில் கையெழுத்து மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு


sign-in-tamil

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 10:18 am
  • அ+ அ-

கிருஷ்ணகிரியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் நேற்று தமிழ் கையழுத்து விழா நடந்தது. இவ்விழாவிற்கு தமிழுக்கும் அமுதென்று பேர் அமைப்பின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மக்கள் அமைப்பின் மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது:

தாய்மொழி தமிழில் கையெழுத்து போடுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், தமிழ் கையெழுத்து விழா, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, 17 நாடுகளில் ஒரே நாளில் இன்று (நேற்று) நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் தமிழில் கையெழுத்திட்டுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்க உள்ளோம்.

தமிழை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும், தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும் தமிழிலேயே இட வேண்டும். ஆங்கிலம் தமிழர்களை மொழியால், உணர்வால், எண்ணத்தால் அடிமைப்படுத்துகிறது. இதனை மாற்ற மக்கள் பாதை முயன்று வருகிறது. அரசு ஆவணங்களில் தமிழில் கையெழுத்து மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து விவரங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்து வருகிறோம்-. அரசு பணியாளர் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணையை, அரசு அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். மேலும், இனி அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள் அனைத்தும் தமிழிலேயே அமைய ஆணை பிறப்பிக்க வேண்டும், என்றார். இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய, கலை, இலக்கிய விழா நடந்தது. முனைவர்கள், பேராசிரியர்கள் சிறப்புரையாற்றினர்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close