[X] Close

கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்: திருப்பூர் மாவட்ட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம்


plus-one-mark-for-schools

திருப்பூர் பழையகோட்டை ஊராட்சியில் நேற்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 09:12 am
  • அ+ அ-

 

இரா.கார்த்திகேயன்

பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, திருப்பூர் மாவட்டத் திலுள்ள பல்வேறு ஊராட்சி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டத் திலுள்ள 265 ஊராட்சிகளில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் சம விகிதத்தில் கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, காங்கயம் வட்டம் கணபதிபாளையம், தம்மரெட்டி பாளையம், கீரனூர், பழைய கோட்டை மற்றும் வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஆகிய 5 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கண்ட ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசுப் பள்ளி களின் பெற்றோர் சங்க பிரதிநிதிகள் பி.டி.சாமியப்பன், பி.ஆண்டிவேல், சு.கிட்டுசாமி ஆகியோர் கூறிய தாவது: கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 100-ல், பிளஸ் 1 பொதுத் தேர்வு நடத்துவது என்றும், அந்த மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணையும் கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்வது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 195-ல், பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள் ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு சாதகம்

இதனால், தனியார் சுயநிதி பள்ளி கள் பிளஸ் 1 பாடத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பிளஸ் 2 பாடங்களை இரண்டு ஆண்டுகளுக்கு கற்பிக்கும் முறை கேட்டை மீண்டும் தொடங்கும். இதன் விளைவாக பிளஸ் 1 பாடங் களை முழுமையாக படிக்காமல், கல்லூரி கல்விக்கு சென்ற மாணவர் கள் கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரி படிப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளனர். இதனை கவனத் தில் கொண்டுதான் அரசாணை 100-ஐ, கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. இந் நிலையில், அதனை திரும்பப்பெறு வது பிளஸ் 1 பொதுத் தேர்வு நடத் தும் நோக்கங்களுக்கு எதிரானது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி சேர்க்கைக்கு செல்வ தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பிளஸ் 2 பாடங்களை இரண்டு ஆண்டுகள் படித்து, அதிக மதிப்பெண் பெறும் தனியார் பள்ளி மாணவர் களோடு அரசுப் பள்ளி மாணவர் கள் உயர் கல்வி சேர்க்கையில் போட்டியிட முடியாத நிலை ஏற் படும். புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இந்த ஆண்டு முதன்முதலாக நடத்தப்பட்டுள்ள பொதுத் தேர்வில், அதிகமான மாண வர்கள் குறைவான மதிப்பெண் பெற்றதால், இப்புதிய முடிவை அரசு எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தது, தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பாடங்களை இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்து பொதுத் தேர்வு எழுத வைத்தது, பிளஸ் 1 பாடங் களை ஓர் ஆண்டில் கற்பித்து பொதுத் தேர்வுக்கு தயாரிக்க இய லாதது உள்ளிட்ட காரணங்களால், பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இக்குறைபாடுகளை சரிசெய்வ தற்கு பதிலாக பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை உயர் கல்விக்கு எடுத்துக்கொள்ளாமல் விடுவது, கல்வித் தரம் குறையவே வழிவகுக்கும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மூன்று ஆண்டுகளுக்கு பொதுத் தேர்வு எழுதுவதால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக வும் புதிய அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளால் மாணவர் கள் மன அழுத்தத்துக்கு ஆளா வதை தடுக்க வேண்டுமென்றால், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு கள் நடத்துவதை தடுக்க வேண்டும். மேலும், 9-ம் வகுப்பு வரை முப்பரு வத் தேர்வு முறை இருப்பதுபோல, 10-ம் வகுப்புக்கும் முப்பருவத் தேர்வு நடைமுறையை கொண்டுவர வேண்டும். கல்லூரிகளில் இருப்பதைபோல, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பருவத் தேர்வுகளை நடத்துவது போன்ற தேர்வு முறை சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ளலாம். இது குறித்து அரசு ஆராய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close