[X] Close

இன்று 150-வது பிறந்த நாள்: தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து 91 ஆண்டுக்கு முன்னரே குரல் கொடுத்த காந்தியடிகள்


mahatma-gandhi-special-article

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 08:59 am
  • அ+ அ-

பாளையங்கோட்டையில் 1927-ல் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடி கள் பேசும்போது, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டியும், மகா புஷ்கரம் விழா வரும் 11-ம் தேதி தொடங்கவுள்ள நிலையிலும் இந்த வரலாற்றுத் தகவல், முக்கியத்துவம் பெறுகிறது.

சுதந்திரத்துக்குமுன் காந்தியடிகள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 4 முறை வந்துள்ளார். இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் செ.திவான் கூறியதாவது:

காந்தியடிகள் தமிழகத்துக்கு 18 தடவை வந்திருக்கிறார். அதில் 4 முறை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளார். 27.3.1919-ல் தூத்துக்குடியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார்.

பின்னர், 23.9.1921-ல் மதுரையிலி ருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வரும் வழியில் கங்கைகொண்டானில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, கார் மூலம் திருநெல்வேலிக்கு அழைத்து வரப்பட்டார்.

தாமிரபரணி கரையில்

அன்று இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி கைலாசபுரம் தாமிர பரணி கரையில் நடைபெற்ற பொது க்கூட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்று பேசினார். பேட்டையைச் சேர்ந்த வியா பாரி எஸ்.கே.ஷேக்முகைதீன் தலைமை யில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம்பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காந்தி யடிகள் ஆற்றிய சொற்பொழிவின் முதல் பகுதியை டி.ஆர். மகாதேவஅய்யரும், 2-ம் பகுதியை டிஎஸ்எஸ் ராஜனும் மொழி பெயர்த்தனர்.

அடுத்து, 6.10.1927-ம் தேதி தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் பேசினார். அடுத்த நாள் 7-ம் தேதி இரவில் பாளை யங்கோட்டையில் கர்சன் மைதானத்தில் (தற்போதைய வ.உ.சி. மைதானம்) நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காந்தியடிகள் பேசும்போது, ``காலரா வருவதை தடுத்திட நகராட்சி உறுப்பினர்கள் ஒருபுறம் மருந்தை உடம்பில் ஏற்றுகிறார்கள். நீங்களோ காலரா பரவுவதற்காக தாமிரபரணியில் கழிவுகளை கொட்டுகிறீர்கள்” என்று குறிப்பிட்டார். தாமிரபரணியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக 91 ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியடிகள் பேசியிருக்கிறார்.

குற்றாலத்தில் மகாத்மா

23.1.1934-ல் கன்னியாகுமரி கடலில் குளித்துவிட்டு, அடுத்த நாள் 24.1.1934-ம் தேதி திருநெல்வேலிக்கு வந்திருந்த காந்தியடி கள் டவுனிலுள்ள சாவடி கூத்தநயி னார்பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்தார். குற்றாலத்தில் அன்று காலை குளிக்க சென்ற போது, அருவியில் குளிக்க தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்படும் விவகாரம் குறித்து காந்தியடிகளிடம் குமாரவேல் என்ப வரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதனால் வேதனை அடைந்த காந்தியடிகள் அருவியில் குளிக்காமலேயே திரும்பி சென்றுவிட்டார் என்று திவான் தெரி வித்தார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close