[X] Close

பராமரிப்பின்றி காணப்படும்  காந்தி காலடி வைத்த பேருந்து நிலையம்


gandhi-bust-stand-special-article

பராமரிப்பின்றி காணப்படும் நடுவட்டம் காந்தி நினைவுப் பேருந்து நிலையம் | படம்:ஆர்.டி.சிவசங்கர்

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 08:42 am
  • அ+ அ-

ஆர்.டி.சிவசங்கர்

காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று (அக்.2) கொண்டாடப்படும் நிலையில், அவர் வருகை தந்த நடுவட்டம் பேருந்து நிலையத்தின் நிலை பரிதாபகரமாக உள்ளது.

சுதந்திரத்துக்கு முன்பே மகாத்மா காந்திக்கும், நீலகிரி மாவட்டத்துக்கும் தொடர்பு உள்ளது. அயோதிதாச பண்டிதர் குன்னூரில் நடத்திய முதல் ஹரிஜன மாநாட்டில் காந்தி பங்கேற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, பல்வேறு பகுதிகளுக்கு சென்று அகிம்சை முறையில் போராடுவது குறித்தும், போராட்டங்கள் குறித்தும் காந்தி பேசி வந்தார்.

1934-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காந்தி, நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர், உதகையில் உள்ள ராமகிருஷ்ணமடம், காந்தல் துளசி மடம், உதகை நகராட்சி மைதானம் (ஏடிசி சுதந்திரத் திடல்), நடுவட்டம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக நீலகிரி ஆவண மைய இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காந்தி, பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்தார். அதில் முக்கியமானது நடுவட்டம். அன்றைய காலத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக நடுவட்டம் இருந்தது. அங்கு மக்களை சந்தித்தார். பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டபோது, அவரது நினைவாக காந்தி பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது.

உதகையில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ் சாலையின் முக்கிய நிறுத்தம் நடுவட்டம். தினமும் ஆயிரக்கணக் கான மக்கள், இப்பேருந்து நிலை யத்தை கடந்து செல்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பேருந்து நிலையம், தற்போது முறையான பராமரிப் பின்றி அலங்கோலமாக காட்சி யளிக்கிறது. காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அவர் காலடி வைத்த நடுவட்டம் பேருந்து நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹீம் கூறும்போது, ‘நடுவட்டம் பேருந்து நிலையத்தை புனரமைக்க ரூ.3 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இந்த நிதியில் வணிக வளாகத் துடன் பேருந்து நிலையம் அமைக் கப்படும். வணிக வளாகத்திலுள்ள கடைகள் வாடகைக்கு விடப்படும். இதன்மூலமாக பேரூராட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

அரசிடம் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. நிதி ஒதுக்கியதும் கட்டுமானப் பணிகள் தொடங்கும். புனரமைப்புப் பணிகள் முடிந்ததும், பேருந்து நிலையம் புதுப்பொலிவுடன் திகழும்’ என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close