[X] Close

பழுதான புதிய செல்போனை மாற்றித்தராத நிறுவனத்துக்கு அபராதம்


cell-phone-company-in-trouble

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 08:35 am
  • அ+ அ-

பழுதான புதிய செல்போனை மாற்றித்தராமல் இழுத்தடிப்பு செய்து வந்த தயாரிப்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கவுண்டம் பாளையம் சக்திநகரைச் சேர்ந்த விமல் தாமஸ், கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது: ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவன செல்போனை ரூ.15,071 செலுத்தி ஆன்லைன் மூலம் வாங்கினேன். இந்நிலையில், 2014 அக்டோபர் மாதம் செல்போன் திரையில் பழுது ஏற்பட்டது. எனவே, செல்போன் நிறுவனம் அங்கீகரித்த பழுதுபார்ப்பு மையத் தில் ஒப்படைத்தேன். அப்போது, என்னிடேமே செல்போனை திருப்பி அளித்த பழுதுபார்ப்பு மையத்தினர், ‘பழுது நீக்க தேவையான உதிரி பாகங்கள் கிடைத்தபிறகு மீண்டும் செல்போனை பெற்றுக்கொள் கிறோம்’ என்று தெரிவித்தனர். அதன்பிறகு, டிசம்பர் மாதம் செல் போனை ஒப்படைத்தேன். பின்னர், பலமுறை தொடர்புகொண்டும் அவர்கள் எந்த பதிலும் அளிக்க வில்லை. எனவே, பழுதான செல் போனை மாற்றித்தரவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப் பீடாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கியாரண்டி காலத்துக்குள்தான் செல்போன் பழுதாகியுள்ளது. இருப்பினும், பழுதைநீக்கி செல்போனை ஒப்படைக்குமாறு பலமுறை கோரியும், மனுதாரரிடம் செல்போன் ஒப்படைக்கப்படவில்லை. இது சேவை குறைபாடாகும். எனவே, பழுதுபார்க்க முடியாத நிலைக்கு உள்ளான செல்போனுக்கு பதில் புதிய செல்போனை தயாரிப்பு நிறுவனம் மாற்றித்தர வேண்டும். அந்த மாடல் இல்லையெனில், செல்போனின் விலையான ரூ.15,071-ஐ 9 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.2,500-ம் தயாரிப்பு நிறுவனம், பழுதுபார்ப்பு மையம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close