[X] Close

தெய்வங்களின் 51 ஆயிரம் புகைப்படங்களை தொகுத்த அரசு ஊழியர்: சாதனையாக ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’ அங்கீகரித்தது


man-collected-51000-pictures-of-god

பெ.சக்கரவர்த்தி

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 09:46 am
  • அ+ அ-

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தெய்வங்களின் 51 ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து, 101 தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். இவரது பணி, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் பெ.சக்கரவர்த்தி (55). இவர் அரசு பதிவுத்துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களில் வெளிவந்த தெய்வங்களின் புகைப்படங் களைத் சேகரித்து வருகிறார்.

இதுவரை அவர், தெய்வங்களின் 51 ஆயிரம் புகைப்படங்களைச் சேகரித்துள்ளார். அவற்றைக் கொண்டு ‘அருள்மிகு தெய்வங் களின் புகைப்படத் தொகுப்பு’ என்ற பெயரில் 101 தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். இதை ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’ அமைப்பு சாதனையாக அங்கீ கரித்து, அதன் சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’ அமைப்பு, இந்தியாவில் உள்ள பல்வேறு திறமை உடையவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக அவர் களைக் கவுரவித்து, அவர்களின் சாதனைகளைப் புத்தகத்தில் பதிவு செய்யும் பணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. சிறந்த சாதனைகளை கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைத்து வருகிறது.

18,000 புகைப்படங்கள்

இந்த சாதனை தொடர்பாக பெ.சக்கரவர்த்தி கூறியதாவது:

நான் ஏற்கெனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 18,000 புகைப்படங்களைச் சேகரித்து, 36 தொகுப்புகளை உருவாக்கி லிம்கா சாதனை புரிந்திருக்கிறேன். நான் இயல்பாகவே தெய்வ பக்தி அதிகம் உடையவன். அதனால் தெய்வங்களின் படங்களைச் சேக ரிக்கத் தொடங்கினேன். அவ்வாறு 51,000 படங்களைச் சேகரித்து 101 புகைப்படத் தொகுப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.

அவற்றில் 29,660 ஆண் தெய் வங்களின் படங்கள், 11,440 பெண் தெய்வங்களின் படங்கள், 8,815 எண்ணிக்கையில் ஆண் மற் றும் பெண் தெய்வங்கள் இணைந்த படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் நந்தீஸ்வரர், காமதேனு, நாகராஜர், கருடாழ்வார் மற்றும் குதிரை, புற்று, மரம், ஆயுதங் களைக் கொண்ட எல்லைச்சாமி களும் இடம்பெற்றுள்ளன.

1,032 மணி நேரம்

இவற்றில் 42,640 படங்கள் வண் ணப் படங்களாகவும், 8,360 படங்கள் கருப்பு - வெள்ளையிலும் உள்ளன. இந்த புகைப்படத் தொகுப்புகளை உருவாக்க 1,032 மணி நேரத்தை செலவிட்டுள்ளேன். 38 லிட்டர் பசையை பயன்படுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close