[X] Close

10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் மதுரை கண்மாய்கள்: கைகொடுத்த பெரியாறு கால்வாய் தண்ணீரும், எதிர்பாராத மழையும்


water-exchange-at-madurai

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:50 pm
  • அ+ அ-

 

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மழையின்றி வறண்ட கண் மாய்களை பார்த்து வேதனை யடைந்த மதுரை மக்கள், தற்போது கடல் போல் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்வதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பாசனக் கண் மாய்கள் இருந்தன. பெரியாறு, வைகை கால்வாய் பாசனம் வந்தபிறகும், விவசாயிகள் கண்மாய் பாசனத்தைக் கை விடவில்லை. கால்வாய் பாசனத் துக்குப் போக எஞ்சிய தண்ணீரை கண்மாய்களுக்குத் திருப்பி, கண்மாய் பாசனத்தையும் தொடர் ந்தனர். அதனால், மதுரையின் நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் ஆண்டு முழுவதும் செழித்தது.

இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக போதிய மழை யின்றி கண்மாய்கள் வற ண்டன. பெரியாறு, வைகை அணைகளும் பெரிய அளவில் கைகொடுக் கவில்லை. இதனால் கண்மாய்கள் கருவேல மரக்காடாகவும், புதர் காடாகவும் மாறின. கண்மாய் பராமரிப்பை அரசு துறைகள் முறையாக செய்யாததால் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காலப்போக்கில் தண்ணீரில்லாத கண்மாய்கள் அழிக்கப்பட்டு அரசும், தனியாரும் போட்டி போட்டுக் கொண்டு கட்டிடங்களை எழுப்பி நீராதாரங்களை அழித்தனர்.

இந்த வகையில், கடந்த 25 ஆண்டுகளில் மாவட்டத்தில் 30 கண்மாய்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டாக இளைஞர்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால், அந் தந்த பகுதி மக்களே அரசு துணையில்லாமல் கண்மாய்களை தூர்வாரும் பணிகளை மேற் கொண்டனர். இதைப் பார்த்த அரசு அதிகாரிகளும் அவர்களின் உதவிக்கு வந்ததால், தற்போது மதுரை கண்மாய்களும், நீர்வரத்து கால்வாய்களும் ஓரள வுக்கு தூர்வாரப்பட்டுள்ளன. இந்நிலையில், தென்மேற்கு பருவமழைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் இடைப்பட்ட இந்த காலத்தில் மாலை நேரங்களில் அடைமழை பெய்து வருகிறது.

பெரியாறு, வைகை அணை நீர்மட்டங்களும் உயர்ந்ததால் வைகை - பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்து, மதுரை மாவட்டத்தில் விவசாயம் நடந்தது. அதனால், விவசாயத்துக்குப் போக கால்வாய் தண்ணீரை கண்மாய்களுக்கு திறந்துவிட்டனர்.

நிரம்பிவரும் கண்மாய்கள்

மழையும் பரவலாக பெய்து மழைநீரும், பெரியாறு கால்வாய் நீரும் ஒரு சேர கண்மாய்களுக்கு வந்ததால், தற்போது முதல் மடை முதல் கடை மடை கண்மாய்கள் வரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பத் தொடங்கி உள்ளன. தென் கால் கண்மாய், விளாச்சேரி கண்மாய், நிலையூர் கண்மாய், மாடக்குளம் கண்மாயில் நீர் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றன.

செட்டிக்குளம் கண்மாய், ஊமச்சிக்குளம், திருப்பாலை, நாராயணபுரம் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இந்த கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து நேற்று முதல் சிறுதூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. அங்கிருந்து கண் ணனேந்தல், பரசுராம்பட்டி கண் மாய்களுக்கும் தண்ணீர் செல்லத் தொடங்கியுள்ளது.

இந்த கண்மாய்கள் நிரம்பியதும், மதுரை மாநகராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான வண்டியூர் கண்மாய்க்கு தண்ணீர் வரத் தொடங்கும். செல்லூர், அவனி யாபுரம் மற்றும் புறநகர், கிராமப் புற கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக மழை பெய்வதால், மதுரையின் கண்மாய்கள் ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக நிரம்பி, இந்த ஆண்டு வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும் மதுரை மாவட் டத்தில் நீங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

களம் இறங்கிய திமுக எம்எல்ஏ

மாவட்டத்தில் 210 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் குறைந்தது 10 நாட்களுக்கு நெல் வயல்களுக்கு பெரியாறு கால்வாய் தண்ணீர் தேவைப்படாது. இந்த தண்ணீரை திருப்பி பாசனக் கண்மாய்களை நிரப்ப, மதுரை கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி, அந்தந்த பகுதி குடியிருப்பு பகுதி மக்களுடன் சேர்ந்து களம் இறங்கினார். தற்போது கால்வாய் தண்ணீர் ஊமச்சிக்குளம், திருப்பாலை, நாராயணபுரம், சிறுதூர், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி உள்ளிட்ட 10 கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

அதனால், திருப்பாலை, அய்யர் பங்களா, தபால் தந்தி நகர், கோமதிபுரம், அண்ணா நகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி உட்பட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close