உலக இதய தினம்: புகை, மதுவை நிறுத்தினால் மாரடைப்பை தடுக்க முடியும்

இன்று உலக இதய தினம்
புகை, மது பழக்கத்தை நிறுத்தினால் மாரடைப்பு வருவதை தடுத்துவிட முடியும் என்று சென்னை அரசு பொது மருத்துவமனை இதய இயல் துறை இயக்குநரும், தலைவருமான பேராசிரியர் டாக்டர் என்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் உலக இதய அறக் கட்டளை (WHF) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வந்த உலக இதய நாள், பின்னர் செப்டம்பர் 29-ம் தேதி யாக மாற்றப்பட்டது. இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப் பொருள் “இதயத்தை கவனி, வாழ்க் கையை அனுபவி” என்பதாகும். இதய நோய்கள் பல இருந்தாலும் மாரடைப்புதான் முக்கியமாக உள் ளது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களுக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு, தற் போது இளைஞர்களுக்கு அதிக அள வில் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
இளைஞர்கள் பாதிப்பு
இது தொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை இதய இயல் துறை இயக்குநரும், தலைவருமான பேராசிரியர் டாக்டர் என்.சுவாமிநாதன் கூறியதாவது:
இதய நோய்களில் மாரடைப் பைக் கண்டுதான் அனைவரும் பயப்படுகின்றனர். குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 சதவீதத்தினர் மாரடைப்பாலேயே இறக்கின்றனர். சராசரியாக 100 பேரில் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. 30 வயது முதல் 55 வயதுக்குள் இருப்ப வர்களில் 10 சதவீதம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. மாரடைப்பு ஏற்படும் 3 பேரில் ஒருவர் உயிரிழக்கிறார். இதற்கு மாரடைப்பு குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம்.
2 மணி நேரம்
மாரடைப்பு வருவதற்கு முன்பு எல்லோருக்கும் அறிகுறிகள் தெரியாது. ஆனால் சிலருக்கு நெஞ்சுப் பகுதியில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம், வியர்த்துக் கொட்டுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மாரடைப்பு வந்தவுடன் தங்கமான நேரம் என்று சொல்லப்படும் 2 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மாரடைப்பு வந்தால் வேகமாக இருமினாலோ, மூச்சை இழுத்துவிட்டாலோ மாரடைப்பு சரியாகிவிடும் என்று சொல்லப்படு கிறது. இது எல்லா மாரடைப்பு களுக்கும் பொருந்தாது. எனவே மாரடைப்பு வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மாரடைப்புக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது திடீரென மாரடைப்பு வந்து விட்டாலோ ஆஸ்பிரின் மாத்தி ரையைப் போட்டுக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். தாமதம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
புகை, மது பழக்கம்
மாரடைப்புக்கு புகை, மது, தேவையில்லாத உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவையே காரணமாக உள்ளன. புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தினாலே 50 சதவீதம் மாரடைப்பு வருவதை தடுத்துவிடலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை தினமும் 40 நிமிட நடைப்பயிற்சி தேவை. வாரத்துக்கு 5 நாட்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல சத்தான உணவு களை சாப்பிட வேண்டும். காய்கறி களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. உணவில் எண்ணெயை குறைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒருவ ருக்கு மாதம் 500 மில்லி லிட்டர் எண்ணெய் அளவே இருக்க வேண் டும். பழங்களை ஜூஸாக சாப்பிடாமல் அப்படியே சாப்பிட வேண்டும். இரவில் குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.