[X] Close

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து புகார் வந்ததில்லை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் பாராட்டு


auto-drivers-good-cause

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 08:59 am
  • அ+ அ-

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல்ல முறையில் நடந்துகொள்வதாகவும், இதுவரை எந்தப் புகாரும் வந்ததில்லை என்றும் ஆட்சியர் பாராட்டினார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நேற்று நடைபெற்றது.

மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பகுதியான பூவம் நண்டலாறு பகுதியில் தொடங்கிய பேரணியை காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, ஆட்சி யர் ஆர்.கேசவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது, ஆட்சியர் பேசிய தாவது: ஒரு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வெளியூரிலிருந்து வந்தால், அவர்களை முதலில் சந்திப்பது ஆட்டோ ஓட்டுநர்கள் தான். அதனால்தான் இந்நிகழ்வு, ஆட்டோ ஓட்டுநர்களின் பங்கேற் புடன் நடத்தப்படுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல்ல முறையில் நடந்து கொள்கின்றனர்.

இதுவரை எந்தப் புகாரும் வந்ததில்லை. அதற்காக ஆட்டோ ஓட்டுநர்களை பாராட்டுகிறேன். நடப்பாண்டு சுற்றுலா தினம் டிஜிட்டல் டூரிசம் என கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமான குறும்படம், புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்றார்.

ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற பேரணியில் 131 ஆட்டோக்கள் பங்கேற்றன. சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகை யிலும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டிருந்தன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close